கந்தர்வகோட்டை, ஜூன் 7: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டாங்கால் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் தற்சமயம் பயனற்ற நிலையில் உள்ளது. அருகில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் இருக்கும் நிலையில் இந்த கோயிலுக்கு தினசரி தரிசனம் செய்ய ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன இவ்வாறு முக்கியமான பகுதியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்
0