திருவள்ளூர், ஆக. 19: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் என்ற தலைப்புடன் மகளிர் உரிமைத் தொகை ₹1000 பெறுவதற்கான மனுக்கள் 17ம் தேதி, 19ம் தேதி, 20ம் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், இந்த முகாம்களில் மனு அளித்தால் அனைவருக்கும் உடனடியாக மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரவி வருகிறது. பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம். மேலும் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.