அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (37). இவர், இவர், காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. வீட்டில் தையல் மெஷின் வைத்து தையல் வேலை செய்து வந்தார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராஜேஷ்குமார் தனது தாயுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று ராஜேஷ்குமாரின் மகன் பிறந்த நாள் என்பதால், அதை கொண்டாடுவதற்காக, கேக் வாங்க, அம்பத்தூர் மார்க்கெட்டுக்கு சென்றார். அம்பத்தூர் ரயில்வே கேட்டை கடந்தபோது, அந்த வழியே சென்னை வந்த வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் ராஜேஷ்குமார் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …