காரிமங்கலம், செப். 21: காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, அனுமந்தபுரம் உள்பட 120க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மேளதாளம் வானவேடிக்கையுடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான பாதுகாப்பு பணியை, இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.