Monday, June 24, 2024
Home » போலீசார், அரசு அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்களிக்க ஏற்பாடு

போலீசார், அரசு அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்களிக்க ஏற்பாடு

by Ranjith

 

ராமநாதபுரம், ஏப். 13: ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஆகியோர்களுக்கு தபால் வாக்களித்திட விண்ணப்பித்தவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினருக்கு இன்றும் (ஏப். 13), இதர அரசுத்துறை அலுவலர்களுக்கு நாளை (ஏப். 14) மற்றும் நாளை மறுநாள் (ஏப். 15) ஆகிய நாட்களிலும் தபால் வாக்களிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தபால் வாக்களிக்க வரும் போலீசார் மற்றும் இதர அரசுத்துறை அலுவலர்கள் வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் பணி ஆணை ஆகியவற்றை தவறாமல் கொண்டுவந்து தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவானது காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். மேலும் தபால் வாக்களிக்கும் நாட்களின்போது வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்று முறையாக வாக்களிப்பு நடைபெறுவதை கண்காணித்துக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi