சிவகங்கை, செப்.6: சிவகங்கை அருகே கலங்காதான்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன்(53). இவர் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட வெளிநாடு செல்வதற்கு ஆட்கள் தேவை என்ற போஸ்டரை பார்த்து துபாய் செல்ல சிவகங்கையில் இருந்த ஒலிம்பியா நிறுவனத்தை தொடர்பு கொண்டார். நிறுவனத்தினர் பணம் கட்ட வேண்டும் என கூறியதையடுத்து கடந்த ஜூன் மாதம் ரூ.40 ஆயிரம் பணம் கட்டினார்.
இதையடுத்து கண்ணனுக்கு விசா அளித்துள்ளனர். இந்த விசாவை வைத்து கண்ணன் வெளிநாடு செல்ல முயற்சித்த போது அது போலி விசா என தெரியவந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கண்ணன் அளித்த புகாரின்பேரில் சதீஸ், சிவன், முருகன்ராஜ், கிருஷ்ணன், பூபதி, பவதாரிணி மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.