மதுரை, ஆக. 19: பிரபல நிறுனத்தின் பேரில் போலியாக பீடி தயாரித்து சப்ளை செய்தவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 142 பண்டல் போலி பீடிகளை பறிமுதல் செய்தனர். மதுரை புறநகர் பகுதிகளில் பிரபல நிறுவனத்தில் பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பன் திருப்பதி போலீசார் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது நரசிங்கத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் போலி பீடிகளை சப்ளை செய்தது தெரிந்தது. இதனையடுத்து அவர் போலி பீடிகள் சப்ளை செய்ய வந்தபோது போலீசார் கையும், களவுமாக பிடித்து, அவரிடமிருந்து 142 பண்டல் போலி பீடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், திருப்பதி ஆகியோர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.