கள்ளக்குறிச்சி, ஜூன் 18: போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்ததாக சார்பதிவாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி அமுதா(59). இவருக்கு சொந்தமான 1.5 சென்ட் இடம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அரியபெருமானூர் கிராமத்தில் உள்ளது. இந்த இடத்தை போலி ஆணவங்களை கொண்டு அரியபெருமானூர் கிராமத்தை சேர்ந்த கல்யாணி, செந்தில், சிவக்குமார், திருமுருகன், வெங்கடேசன், ஆவண எழுத்தர் செல்வம், கள்ளக்குறிச்சி சார்பதிவாளர்கள் சிவக்குமார், பாலமுருகன், தனியார் நிதி நிறுவன ஊழியர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இடத்தை அபகரித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அமுதா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் பரிமளா மற்றும் போலீசார் சார்பதிவாளர்கள் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்ததாக சார்பதிவாளர்கள் உள்பட 9 பேர் மீது வழக்கு
0
previous post