தேனி, செப். 6: தேனி அருகே அரண்மனைப்புதூரில் உள்ள முல்லைநகரை சேர்ந்தவர் பாலசுந்தர்ராஜ்(48). புதிய தமிழகம் கட்சி நிர்வாகி. இவருக்கும், இவரது சகோதரர்களுக்கும் சொந்தமான நிலத்தை பாலசுந்தர்ராஜின் மற்றொரு சகோதரர் ஞானசேகர் போலியாக பாகவிஸ்தி பத்திரம் பதிவு செய்து நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கேட்டபோது ஞானசேகர், அவரது மனைவி சொர்ணம், மகன் ரத்தினவேல்பாண்டியன் ஆகிய மூவரும் சேர்ந்து பாலசுந்தர்ராஜுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து எஸ்.பியிடம் பாலசுந்தர்ராஜ் புகார் அளித்தார். இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் ஞானசேகர், சொர்ணம் மற்றும் ரத்தினவேல்பாண்டியன் ஆகியோர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.