தாராபுரம், ஜூன் 16: தாராபுரம் ஒன்றியம் குண்டடம் அடுத்துள்ள தும்பலப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி (60). இவர், நேற்று காலை வழக்கபோல அருகில் உள்ள தனது தோட்டத்தை பார்வையிட சென்றார். அப்போது, போர்வெல் மோட்டாருக்கு போடப்பட்டிருந்த 102 மீட்டர் நீளமுள்ள காப்பர் வயர்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து அருகில் உள்ள பள்ளத்தில் வைத்து தீயால் உருக்கி காப்பர் கம்பியை மட்டும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பழனிசாமி இதுகுறித்து குண்டடம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். அதன் ேபரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போர்வெல் மோட்டாரில் வயர் திருட்டு
58
previous post