பூந்தமல்லி:போரூர் அருகே, கஞ்சா விற்ற 3 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். பூந்தமல்லி, போரூர் அ கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பதாக பூந்தமல்லி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து போலீசார் சோதனை செய்தனர். அங்கு 3 கல்லூரி மாணவர்கள் இருந்தனர். அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில் 5 கிலோ கஞ்சா இருந்தது.விசாரணையில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களான கவுதம்(20), அஜ்ஜூ(20), சியாம்(20), ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதில் மூன்று பேரும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்ததும், கஞ்சா பழக்கம் உடைய இவர்கள் கஞ்சாவை விற்பனை செய்தால் இன்னும் அதிக பணம் கிடைத்து உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்….