ஈரோடு, ஜூன் 6: ஈரோடு வைராபாளையம் பகுதியில் நேற்று கருங்கல்பாளையம் போலீஸ் எஸ்ஐ ரகுவரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த வாலிபர், போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றார். அந்த நபரை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் சாலையை சேர்ந்த தர்மன் மகன் தினேஷ் (21) என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்ய வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தினேஷை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 4 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
0