அம்பத்தூர், ஆக. 31: அமைந்தகரையில் உள்ள ஒரு வீட்டில், போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, அமைந்தகரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குறிப்பிட்ட அந்த வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 3,500 போதை மாத்திரைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நேபாள நாட்டை சேர்ந்த ஹேம்லால்(25), கேம் ஆன்பேர்சிங்(26) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தபோது, வெளிமாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை வரவழைத்து, வீட்டில் பதுக்கி வைத்து, விற்பனை செய்ததும், இதில், மேலும் சிலர் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின்பேரில், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நேபாள நாட்டை சேர்ந்த தினேஷ் பகதூர்(29), ககன்(24), பிரசாஷ்(26), சர்மா(30), சுமன்(24), சுபாஷ்(26) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.