விழுப்புரம், ஆக. 14: விழுப்புரம் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் பாகூரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சத்தியமூர்த்தி(45). நீண்ட நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் உறவினர்கள் கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் செயல்படும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென்று சத்தியமூர்த்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வளவனூர் காவல்நிலையத்தில் அவரது உறவினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் புதுச்சேரி வாலிபர் உயிரிழப்பு
previous post