கோவை,ஜூலை7: கோவைப்புதூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பட்டிங் ஆர்டிஸ்ட் சார்பில் ‘‘போதை பொருள் இல்லா தமிழகம்” என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு போட்டி நேற்று நடந்தது. இதில்,போதை பொருள் இல்லா தமிழகம் குறித்த ரங்கோலி விழிப்புணர்வு கோலம் போடப்பட்டது.
தொடர்ந்து குழந்தைகளுக்கு போதை பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும், போதை பொருள் எதிர்ப்பு தொடர்பாகவும் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது. இப்போட்டியில், குழந்தைகள் பலர் பங்கேற்று ஓவியங்களை வரைந்து அசத்தினர்.
பின்னர், அவர்களது ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இப்போட்டியில், 17 வயது பிரிவில் மாணவி தேவதர்ஷினி, 8-ம் வகுப்பு மாணவி சுதர்ஷனா, 4-ம் வகுப்பு மாணவன் பிரகதி னிவாசன்,யூகேஜி மாணவி சிவன்யா ஆகியோர் முதல் பரிசை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.