சேத்துப்பட்டு, மே 20: சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் எறும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ(27) பெட்டி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா விற்பனை செய்யப்படுவதாக சேத்துப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேத்துப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், சிவக்குமார், முருகன் மற்றும் காவலர் மணிகண்டன் ஆகியோர் திடீரென கடையில் புகுந்து சோதனை செய்த போது ஹான்ஸ், குட்கா, கூலிப் ஆகியவை இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து ஜெயஸ்ரீக்கு யார் சப்ளை செய்கிறார்கள் என விசாரணை நடத்தினர். இதில் வந்தவாசி தாலுகா கீழ்வெள்ளியூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் தமிழரசு என தெரிய வந்தது. பின்னர் ஜெயஸ்ரீ மூலம் போன் செய்து தமிழரசு ஆன்ஸ் குட்கா இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த போது மறைந்திருந்த போலீசார் அவரையும் பிடித்துகாவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். தமிழரசுக்கு சிமோகாவை சேர்ந்த மாஞ்சா என்பவர் லாரி டிரைவர் அவர் கொடுக்க சொன்னதின் பேரில் கொடுத்தேன் வேறு ஏதும் எனக்கு தெரியாது என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழரசு இருசக்கர வாகனம் மற்றும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் , கூலிப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
போதை பொருள் விற்ற பெண் உட்பட 2 பேர் கைது பெட்டிக்கடையில் போலீசார் அதிரடி
0
previous post