நாகர்கோவில், ஜூன் 11: குமரி மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் குடிபோதையில் பைக்குகள் மற்றும் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் நேற்று முன் தினம் (ஞாயிறு) ஒரே நாளில் 47 பேர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குபதிவு செய்யப்பட்டு தலா ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களில் 125 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதித்துள்ளனர். தொடர்ந்து 2 வது முறையாக குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்குபவர்களின் லைசென்சு ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.
போதையில் வாகனம் ஓட்டிய 47 பேர் மீது வழக்கு தலா ₹10 ஆயிரம் அபராதம்
62
previous post