ஊட்டி, ஜூன் 5: ஊட்டி ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பள்ளிகளில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்சோ வழக்குகள் குறித்து ஊட்டி டி3 காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எஸ்ஐ., நிஷாந்தினி தலைமையில் காவல்துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.