தேனி, செப். 2: தேனியில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டூவீலர் பேரணி நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேனி குழு சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டூவீலர் பிரச்சார பேரணியை தேனியில் நடத்தினர். பிரச்சார பேரணிக்கு தாலுகா தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், தாலுகா செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். இதில் தாலுகா பொருளாளர் அறிவானந்தம், துணைத் தலைவர் வெற்றிவேல், தாலுகா குழு உறுப்பினர் திருமா உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் தர்மர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் காமுத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழத்தினர்.