தஞ்சாவூர், செப். 1: போதிய பயணிகள் இல்லாததால் சென்னை- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து இன்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் ( வண்டி எண். 06037) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து 2ம் தேதி ( திங்கள் கிழமை ) இரவு 7:10 மணிக்கு சென்னைக்கு இயக்க இருந்த சிறப்பு ரயிலும் ( வண்டி எண். 06038) முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.