போடி: போடி நகராட்சி பகுதிகளுக்குள் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட நிறுவனம் மூலம் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக முதற்கட்டமாக 200 நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய இலக்கு வைத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நாய்களுக்கு வெறிநாய்த் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. நேற்று வரை 160 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை செய்து தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இப்பணிகளில் துப்புரவு ஆய்வாளர்கள் மணிகண்டன், சுரேஷ்குமார், அகமது கபீர், கணேசன் ஈடுபட்டுள்ளனர்.