போடி, அக். 21: போடி அருகே பெ ருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள பேச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கண்ணன் என்பவர் பூசாரி உள்ளார். நேற்று முன்தினம் மாலை கோயிலை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றவர், மறுநாள் காலையில் கோயிலை திறக்க வந்தார் . அப்போது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோயில் மற்றும் சமூதாய தலைவர் ஜெயராஜ் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்ததில் உண்டியலில் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை இருந்ததாக பூசாரி தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கோயிலில் கொள்ளை அடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.