தேனி, ஜூலை 3: போடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் வருகிற 5ம் தேதி மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக தேனி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் முருகேஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போடி துணை மின்நிலையத்தில் வருகிற 5ம் தேதி மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை போ.அணைக்கரைப்படடி, பி.மீனாட்சிபுரம், குரங்கனி, போடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
போடியில் மின் தடை
0
previous post