போடி, ஆக. 26: போடி டி.வி.கே.கே நகர் வர்த்தக சங்க தனியார் மண்டபத்தில் தேனி வடக்கு மாவட்ட நகர திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட கலை இலக்கிய பேரவை அணி அமைப்பாளர் நம்பிக்கை நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு கிடைத்த நல்ல பல பயன்களையும் திட்டங்களையும் ஆட்சியின் தன்மையும் நிர்வாகத்திறமையும் எடுத்துரைத்து மீண்டும் திமுக ஆட்சி வருவதற்கு பாரபட்சம் இன்றி திமுக உட்பட கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து முழு மூச்சாக உழைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், பஷீர் அகமது, பரணி முன்னாள் நகரச் செயலாளர் ரமேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்ட னர்.