தேனி, ஆக. 11: தேனி அருகே பழனிசெட்டியில் போடி சட்டமன்றத் தொகுதி மற்றும் மதுராபுரியில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்தது. தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, ராமநாதபுரத்தில் வருகிற 17ம் தேதி தமிழ்நாடு முதல் அமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தென்மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை நடக்க உள்ளது. இதில் அனைத்து திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
இந்த கூட்டங்களில் தேனி வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ராசிசெந்தில், திருக்கண்ணன், மாவட்ட பொருளாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் தேனி வடக்கு சக்கரவர்த்தி, தேனி தெற்கு ரத்தினசபாபதி, போடி கிழக்கு முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், சின்னமனூர் மேற்கு முருகேசன், பெரியகுளம் வடக்கு எல்.எம்.பாண்டியன், நகர செயலாளர்கள் போடி புருசோத்தமன், தேனி நாராயணபாண்டியன், பெரியகுளம் முகமதுஇலியாஸ், நகர்மன்றத் தலைவர்கள் தேனி ரேணுப்பிரியாபாலமுருகன், பெரியகுளம் சுமிதாசிவக்குமார்,
போடி ராஜேஸ்வரிசங்கர், தேனி நகர்மன்ற துணைத் தலைவர் வக்கீல்செல்வம், பெரியகுளம் யூனியன் சேர்மன் தங்கவேலு, பேரூராட்சி சேர்மன்கள் வீரபாண்டி கீதாசசி, பூதிப்புரம் கவியரசு, தென்கரை நாகராஜ், தாமரைக்குளம் பால்பாண்டி, மார்க்கையன்கோட்டை ஓ.ஏ.முருகன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர்.வைகை ஸ்கேன் பாண்டியராஜன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜசேகர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.