திருப்பூர், ஆக.18: திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் (27) இவர் ஜேசிபி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள 17 வயது பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து நெருங்கி பழகிய நிலையில் பெண் கர்ப்பமாகி உள்ளார். பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அருண்குமார் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.