அருப்புக்கோட்டை, செப்.21: காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பெற்ேறாருடன் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இச்சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பஞ்சாண்டி(51) என்ற கூலித்தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்ேறார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் பஞ்சாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.