ஈரோடு, ஆக. 31: காஞ்சிக்கோயில், கொண்டையன் காட்டு வலசு, தேவாலய பாறை பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காஞ்சிக்கோயில் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அந்த கும்பலை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சேலம் மாவட்டம், கொளத்தூர், ராமகிருஷ்ணா காலனியைச் சேர்ந்த மணி (42), காஞ்சிக்கோயிலைச் சேர்ந்த ஜெகதீசன் (29), ராம்ராஜ் (32), சுந்தரம் (28). பொன்னாண்ட வலசு, ராவுத்தகவுண்டர் தெருவைச் சேர்ந்த ரவி (53), ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டு, பணம் ரூ. 1,650 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.