திருச்சி: திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க கூடுதல் போலீசார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையின் கீழ் ஒரு உதவி கமிஷனர் மேற்பார்வையில் கண்டோன்மென்ட், அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை, உறையூர் மற்றும் ரங்கம் ஆகிய ஆறு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த ஆறு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுகளின் கீழ் மொத்தம் 279 போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் ேபாலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள்-3 பேர், எஸ்ஐ-2, எஸ்எஸ்ஐ-125, தலைமை காவலர்-101, கிரேடு-1 போலீசார்-36, கிரேடு-2 போலீசார் 12 பேரி என மொத்தம் 279 பேர் பணியாற்றி வருகின்றனர்.