கிருஷ்ணகிரி, நவ.16: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல்நிலைய எஸ்எஸ்ஐ வெங்கடாஜலம் மற்றும் போலீசார் குந்தாரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக ஆபாசமாக பேசிக்கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கள்ளக்குரி பகுதியை சேர்ந்த சந்தோஷ்(29), சாமந்தமலை ஜீவா(22), விஷ்ணுகுமார்(22), சின்னமேலுப்பள்ளி அசோக்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.