தர்மபுரி, மே 24: தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொ.மல்லாபுரம் பேரூராட்சி பழைய ஒட்டுப்பட்டி கிராமத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் சுகுணா தேவி, ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் தினகரன், காவியா, உதவி பணியாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனை, சிகிச்சை வழங்கினர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் விஜயலட்சுமி, ஊர் கவுண்டர் குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் துரைராஜ், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பொ.மல்லாபுரத்தில் இலவச சித்தா மருத்துவ முகாம்
0
previous post