திருச்சி, நவ.15:திருச்சியில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே நடந்த பூப்பந்து போட்டியில் அரசினர் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாம்பியன் பட்டம் பெற்றனர். சென்னை அண்ணா பல்கலைகழக விளையாட்டு கழகம் சார்பில் 13வது மண்டலத்திற்க்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான பூப்பந்து போட்டி அரசினர் பொறியியல் கல்லூரி ரங்கம், திருச்சியில் நடைபெற்றது. இறுதி போட்டியில் மாணவியர்கள் பிரிவில் அரசினர் பொறியியல் கல்லூரி ரங்கம், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, (திருச்சி வளாகம்) 35-19, 35-25 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து அண்ணா பல்கலைக்கழக 13வது மண்டல சாம்பியன் அணியாக திகழ்ந்து மண்டலங்களுக்கு இடையிலான பூப்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றது. மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் மாணவியர்கள் பிரிவில் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, கேர் பொறியியல் கல்லூரியை 33-35, 35-27, 35-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.