பொன்னமராவதி, ஜூன் 30: பொன்னமராவதி சிவன் கோயிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை விழா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவ ட்டம், பொன்னமராவதி ஆவுடையநாயகி அம்பாள் சமேத ராஜா ராஜா சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் குழு சார்பில் மாணிக்க வாசகர் குருபூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாணிக்க வாசகர் வீதிவுலா கையிலை வாத்தியத்துடன் ஊர்வலமாக சென்று வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், திருவாசகம் முற்றோதல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.