பொன்னமராவதி,மே6: பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, 450 கிலோ கல் வைத்த மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன்குமார், பொன்னமராவதி உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்திக் ஆகியோர் பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது பிரதான சாலையில் உள்ள பழக்கடையில் ஆய்வு செய்த போது அங்கு சுமார் 450 கிலோ கல் வைத்த மாம்பழத்தையும் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன்குமார், பொன்னமராவதி உணவு பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கல் வைத்த மாம்பழங்களை பேரூராட்சி பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தினர். அதேபோன்று பல்வேறு கடைகளில் ஆய்வு செய்து கல் வைத்த பழங்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.