பொன்னமராவதி: பொன்னமராவதி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற சாதாரணத் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். துணை தலைவர் வெங்கடேஸ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன் வரவேற்று பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கூட்டத்தில் 15 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ 45.30 லட்சத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம் அமைத்தல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல், வளமீட்பு வளாகத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் தடுப்பு வேலி அமைத்தல், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ. 11 லட்சத்தில் வையாபுரி பகுதியில் அங்கன்வாடி மையம் அமைத்தல், அம்ருத் 2.0 திட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் ரூ 13.35 லட்சத்தில் மேற்கொள்வது என 187.53லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியது மற்றும் பிறப்பு இறப்பு பதிவு செய்தல், வரி மற்றும் வரியற்ற இனங்கள் நிலுவை விபரம்,வரவு செலவு விபரம் உள்ளிட்ட 10 பொருட்கள் விவதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் நாகராஜன், மகேஸ்வரி, புவனேஸ்வரி, சிவகாமி, முத்துலட்சுமி, இசா, சாந்தி அடைக்கி, ராமநாதன், ராஜா, திருஞானம், ரவி, சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி பேரூராட்சி கூட்டம்
previous post