பொன்னமராவதி, ஜூன் 7: பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் புதிய வழித்தட பேருந்தினை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பொன்னமராவதி பேருந்துநிலையத்தில் இருந்து நெற்குப்பை, தெக்கூர், கண்டவராயன்பட்டிக்கும், கண்டவராயன்பட்டியில் இருந்து பரங்கினிப்பட்டி சென்று அங்கிருந்து உடையநாதபுரம் வழியாக திருப்பத்தூர் சென்று வரும் புதிய வழித்தடத்தையும் மற்றும் ஏற்கனவே கோவை, சேலம் சென்று வரும் பழைய பேருந்திற்கு பதிலாக புதிய பேருந்துகளின் சேவைகளை தமிழ கனிமளத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளர் முகமதுநாசர், திமுக ஒன்றியச்செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, நகரச்செயலாளர் அழகப்பன், பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன், அரசு போக்குவரத்துக்கழக வணிக மேலாளர் தில்லைராஜா, பொன்னமராவதி கிளை மேலாளர் மதியழகன், தொமுச புதுக்கோட்டை மண்டலத்தலைவர் அடைக்கலம், கிளைசெயலாளர் சுப்பிரமணி, திமுக நிர்வாகிகள் ஆலவயல் அழகப்பன், அம்பலம், தேனிமலை, சாமிநாதன், சுப்பையா, மணிஅண்ணாத்துரை, செல்வம், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.