பொன்னமராவதி, மே 21: பொன்னமராவதியில் உள்ள ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. ஆவுடை நாயகி சமேத சோழீஸ்வர் கோயிலில் கால பைரவருக்கு மஹாருத்ரஹோமம், அபிஷேகம், சிறப்பு யாகம், அபிஷேகம் அலங்காரம், வெள்ளி அங்கி சாத்துதல், தீபாராதனை நடைபெற்றது. வடை மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், விழாக்குழு நிர்வாகிகள் சேதுபதி, பாஸ்கர், குமரன், தியாகு உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல, பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட இப் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
0