பொன்னமராவதி,மே 22: பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி பகுதியில் கடந்த 5 நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் பரவலாக மழைபெய்துள்ளது. நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் அடித்தது. மதியம் முதல் பரவலாக கன மழை மற்றும் மிதமான மழை பெய்தது.