பொன்னமராவதி, செப்.5: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் ஆலேசானைக்கூட்டத்தில் ஊராட்சிகள் உதவிஇயக்குனர் கலந்து கொண்டு வரியினங்களை முறையாக அனைத்தையும் வசூல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசன் தலைமை வகித்து ஒன்றியத்தில் உள்ள 42கிராம ஊராட்சிகளிலும் வீட்டுவரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களை முறையாக அனைத்தையும் வசூல் செய்யவேண்டும். வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், ஊராட்சி கணக்குகளை முழுமையான அளவில் முடித்து வைத்துக்கொள்ளவேண்டும் ஊராட்சி வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கிப் பேசினார். இதில் ஒன்றிய ஆணையர்கள் ஆயிசாராணி, ராமச்சந்திரன், துணை ஆணையர்கள், மண்டலதுணை ஆணையர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டனர்.