பொன்னமராவதி, ஜூலை 7: பொன்னமராவதி அருகே உலகம்பட்டி கிராமத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா உலகம்பட்டி கிராமத்தில் வெள்ளையன் என்பவருடை பசு மாடு, அவரது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, தவறி 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. இதுகுறித்து, பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த நிலைய அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையிலான வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.