Friday, March 1, 2024
Home » பொன்னமராவதி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

பொன்னமராவதி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

by Neethimaan

பொன்னமராவதி,டிச.28: பொன்னமராவதி அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொன்னமராவதி அருகே உள்ள மேமனப்பட்டி ஆறு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் மேமனப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை கண்டதும் டிராக்டரை டிரைவர் சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து அந்த டிராக்டரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்ததுடன், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

fourteen + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi