பொன்னமராவதி, ஆக. 6: பொன்னமராவதி அருகே மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. பொன்னமராவதி அருகே நாத்துக்கண்மாயில் நாத்துபட்டி பொதுமக்களால் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஒரு ஊர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை தூத்தூர் அணியினரும், இரண்டாம் பரிசை கொப்பனாபட்டி அணியினரும், மூன்றாம் பரிசை புதுவயல் அணியினரும், நான்காம் பரிசை என்பிடி பாய்ஸ் அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப் பரிசு மற்றும் வெற்றிக் கோப்பையை கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து வழங்கினார்.