பொன்னமராவதி.ஆக.21: பொன்னமராவதி அருகே ஜல்ஜீவன் திட்டப் பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். மத்தியஅரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீன் திட்டம் பொன்னமராவதி அருகே கோவணூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மத்திய குழுவுடன் ஊராட்சித்தலைவர் ராமசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், பணி மேற்பார்வையாளர் சபியுல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.