பொன்னமராவதி,செப்.20: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சித்தலைவர் செல்வி தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார். டெங்குகாய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியர் சுபத்ரா, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய தொழில்நுட்ப உதவியாளர் நாகராஜன், ஆசிரியர்கள் சத்யா, கலைவாணி, கீதா,கலைச்செல்வி, பள்ளிமேலாண்மைக்குழு தலைவி யசோதா, சத்துணவுஅமைப்பாளர் ராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.