பொன்னமராவதி,செப்.13: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் பனை விதை சேகரிப்பு மற்றும் பனை விதை பதிக்கப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டும். பனை மரங்கள் நட்டால் மழை வரும் என்ற நம்பிக்கையில் அதிக அளவு பனை விதைகள் நடவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் மற்றும் புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் மூலம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு அங்குள்ள கண்மாய்களில் நடப்பட்டது.