பொன்னமராவதி, செப்.5:பொன்னமராவதி அருகே ஆடுகள் திருடியவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையக்கவுண்டம்பட்டியை சேர்ந்த சடையக் கவுண்டர் மனைவி பொன்னம்மாள் என்பவர் பஸ் நிறுத்தம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு பின்புறம் தனக்கு சொந்தமான 2 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்த ஆடுகள் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு காணாமல் போனது. இந்நிலையில் பொன்னம்மாள் காரையூர் போலீசில் புகார் செய்தார். இதனை விசாரித்த போலீசார் திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியை சேர்ந்த மெய்யப்பன் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (21) என்பவர் டூவீலரில் ஆடுகளை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ஆடுகளை போலீசார் மீட்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.