பொன்னமமராவதி, மார்ச் 13: பொன்னமராவதியில் மது பழக்கம் மற்றும் போதைபொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் மது பழக்கம் மற்றும் போதைபொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள்குறித்து வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணி நடந்தது. மது மற்றும் போதை பொருட்கள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாசில்தார் சாந்தா விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார். இதில் புதுக்கோட்டை, கோட்ட கலால் அலுவலர் திருநாவுக்கரசு, தனி வருவாய் ஆய்வாளர்கள் பாண்டியன், ராஜா, துணைதாசில்தார்கள் சேகர், ராம்குமார்,திருப்பதிவெங்கடாலம் வருவாய்ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்படபலர் கலந்துகொண்டனர்.