பொன்னமராவதி,செப்.2: பொன்னமராவதியில் நரம்பியல் சம்மந்தமான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் திருச்சி நியுரோ ஒன் மருத்துவமனை இணைந்து பக்கவாதம், வலிப்பு மற்றும் மூளை நரம்பியல் பிரச்னைகளுக்கான இலவச மருத்துவ முகாம் பொன்னமராவதி லயன்ஸ் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு தலைவர் முருகன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் ஜெயராஜ், செயலாளர் பாண்டிக்குமார், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி நியுரோ ஒன் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு பக்கவாதம், வலிப்பு மற்றும் மூளை நரம்பியல் பிரச்சனைகளுக்கான பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். இதில் நிர்வாகிகள் பாலமுரளி, பாலசுப்பிரமணியன், செல்வம் உட்படபலர் கலந்துகொண்டனர்.