பொன்னமராவதி, செப்.4: பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செயலர் கருணாமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் செங்கோடன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஏனாதி ராசு, மாவட்ட பொருளர் ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்க வேண்டும்.
காரையூர் காவல்நிலையத்தை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் மீண்டும் இணைக்க வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பதிக்கும் திட்டப்பணியால் மிகவும் சேதமடைந்து காணப்படும் பொன்னமராவதி அண்ணாசாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. ஒன்றிய செயலர் சதீஷ், நிர்வாகிகள் செல்வம், ராசு, பஞ்சவர்ணம், செல்வி, ராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.