திங்கள்சந்தை, ஆக. 14: இரணியல் சப். இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், தலைமை காவலர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணக்கரை நான்கு வழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய சந்திர சேகர் (34), தனுஷ் (30) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் மீதம் இருந்த மதுவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.